SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
- Indexed episodes, last 90 days
- 376
- Latest publication
- Oct 1, 2026
- Audience
- Checking…
- Earliest in this view
- Jul 4, 2026
Latest episodes
ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் ஈம்யு: ஆச்சரிய தகவல்கள் (opens the original)
Read excerpt
கங்காருவைப் போலவே ஆஸ்திரேலியாவின் அடையாளமாக அறியப்படும் இன்னொரு உயிரினம் ஈம்யு. பறக்க முடியாது; ஆனால் மிக வேகமாக ஓடும். கடும் வெப்பத்தையும் உணவுப் பற்றாக்குறையையும் தாங்கும். அதிலும், முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது ஆண் ஈம்யு என்பது இன்னொரு ஆச்சரியம். இப்படிப் பல தனித்துவங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் ஈம்யு பறவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
முதன்முறையாகப் பறை இசைக்குக் கலைமாமணி வென்ற பனையூர் ராஜா! (opens the original)
Read excerpt
கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவர்களுக்கு வருடாவருடம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. 8 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அதன்போது, முதன்முறையாக, ஒரு பறை இசைக் கலைஞருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த விருது பெற்ற டாக்டர் பனையூர் ராஜாவுடன் குலசேகரம் சஞ்சயன் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு.
சிட்னி விமானநிலையத்திலிருந்து பயணிப்பது ஆபத்தானதா? (opens the original)
Read excerpt
சிட்னி விமான நிலையத்தில் ஜூலை 27ஆம் தேதி இரண்டு பயணி விமானங்கள் ஒன்றுக்கொன்று வெறும் 120 மீட்டர் தூரத்தில் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டன. ஒரு விமானத்தில் 157 பேர். மற்றதில் 55 பேர். ஒரு பெரும் அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. பதிவுகள் 2003ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான ஓடுபாதை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று, நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அமைப்பு, நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிட்னி விமான நிலையத்த
இன்றைய செய்திகள்: 01 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை (opens the original)
Read excerpt
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 01/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Bathlaவின் சரிவு: வீடு கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? (opens the original)
Read excerpt
ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வீட்டுச் சந்தை மாற்றங்கள், அதிகரித்த கட்டுமானச் செலவுகள் மற்றும் நிதி அழுத்தங்களுக்கு மத்தியில், Bathla Group போன்ற பெரிய கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணியில், Bathla நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், கட்டுமானத் துறையில் அனுபவம் கொண்டவரும், சிட்னியில் Sydneywide Homes எனும் கட்டுமான நிறுவனத்தினை நடத்திவருபவருமான தேவகுமார் சந்திரராஜ் அவர்களுடன் உரையாடினோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வ
Publishing over time
Last 90 days. Choose a month to open its work.
Recurring subjects
Named in the text we hold. One piece can cover several.
Audience
No verified audience measurement yet.
About this data
Counts cover the work we have indexed. Tone needs enough text and a confident classification. Excerpts and episode notes are not full articles or transcripts.
Identity or attribution wrong? Suggest a correction.